தமிழக அரசு நாடு முழுவதும் அதிரடியாக 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது. இந்த அறிவிப்பின்படி ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், ஏடிஜிபி வெங்கட்ராமன், ஏடிஜிபி வினித் தேவ் ஆகிய 3 பேருக்கும் சிறப்பு படை பிரிவுகளின் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வில் ஐபிஎஸ் ஜோடிகளான வருண் குமார், வந்திதா பாண்டே ஆகிய இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இருவருமே 2011 பேட்சை சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட அதிகாரிகள்.
இருவரையுமே சமீபத்தில் குறிப்பிட்ட கட்சியினர் சமூக வலைதள தாக்குதல் நடத்திய சம்பவம் குறிப்பிடத்தக்கதாகும். இருவருமே அருகருகே உள்ள மாவட்டங்களான திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பியாக பணியாற்றி வந்தவர்கள். தற்பொழுது தமிழக அரசு அதிரடி பணியிட மாற்றம் உத்தரவின்படி வருண் குமார் திருச்சி டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். வந்திதா திண்டுக்கல் மாவட்ட டிஐஜி யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
0 Comments