தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம்..... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி


 தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது. ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக எதிர்கட்சிகள் கூட அவ்வப்போது கேள்வி எழுப்புகிறது. இந்த நிலையில் இன்று ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் கள  ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் விசைத்தறி தொழிலாளர்களின் சந்தித்தார்.

அவர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் அதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாகவும் விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் உறுதி கொடுத்தார்.

Post a Comment

0 Comments