திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆரணி ஆற்றில் 2000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள பகுதிகளை பார்வையிட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர்,மீஞ்சூர் சேர்மன் அத்திப்பட்டு ஜி. ரவி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
குறிப்பாக லட்சுமிபுரம் அணைக்கட்டு,மனோபுரம்,ஆண்டார் மடம் தடுப்பணை ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் செய்தார்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பொன்னேரி தொகுதிக்குட பகுதிகளில் உள்ள ஆரணி ஆட்டம் கரையோரங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிச்சாட்டூரில் இருந்து 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இங்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பழவேற்காடு அருகே உள்ள ஆண்டார் மடம்- கடப்பாக்கம் சாலை மிகுந்த பழுதடைந்துள்ள நிலையில் 30 ஆண்டு காலமாக மக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
தற்போது இந்த சாலையை செப்பனிட நான்கு கோடியில் திட்டப்பணிகள் துவங்கப்பட உள்ளன எனவும் மீஞ்சூர் பகுதியில் தண்ணீரால் சூழப்பட்டுள்ள இடங்களில் வேகமாக பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் தண்ணீர் வடிந்து அங்குள்ள மக்கள் இயல்பு நிலைக்கு வருவார்கள் என கூறினார்.இந்த ஆய்வின் போது மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் நட்ராஜ், குணசேகரன்,மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன்,நீர்வளத்துறை அதிகாரிகள் நந்தகுமார்,முருகன்,கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0 Comments