ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து வணிகர் சங்கங்கள் கடையடைப்பு ஆர்ப்பாட்டம்..... மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து வணிகர் சங்கங்கள் இன்று கடை அடைப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தி பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் மதியழகன் தலைமையில் அனைத்து வர்த்தக சங்கங்களும் இணைந்து இன்று மத்திய மாநில அரசுகளை கண்டித்து வணிக நிறுவனங்களுக்கு எதிரான சட்டங்களை நீக்க கோரியும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை குறைத்திட கோரியும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் இன்று நேரில் மனு அளித்தனர் மேலும் மத்திய மாநில அரசுகள் வணிகர்களின் விரோத போக்கை கண்டித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு செய்தனர்.
No comments