மீஞ்சூரில் திமுக மூத்த முன்னோடி சுந்தரம் நினைவு தினம்..... திருவள்ளுர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்


திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய துணை    செயலாளரும் கழக மூத்த முன்னோடியமான எம்.வி சுந்தரம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் கழக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 பின்னர் மறைந்த மூத்த முன்னோடி எம் வி சுந்தரத்தின் கழக வளர்ச்சி பணி குறித்து நினைவுகூர்ந்தனர். இதில் மீஞ்சூர் நகர செயலாளர் பட்டாபிராமன் துணை செயலாளர் தமிழரசன் மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments