பெஞ்சல் புயல் மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் - முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை

 


பெஞ்சல் புயல் மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் :முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை 

இது பற்றி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம்,  திருவண்ணாமலை,  கிருஷ்ணகிரி,  தர்மபுரி போன்ற மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை லெள்ளத்தில் வீடுகள் மூழ்கியதனால் பல குடும்பங்கள் வாழ்தாரம் பாதிக்கப் பட்டுள்ளனர்.  மழையில் இடிந்து மற்றும் சேதம் அடைந்த வீடுகளை அரசின் செலவில் கட்டி கொடுக்க வேண்டும்.  மழையில் பாதிக்கபட்ட பகுதிகளில் பொது மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெற மருத்துவ முகாம்களை   உடனடியாக அமைக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

 திருவண்ணாமலை தீப மலையில் மண் சரிவில் 5 மேற்பட்டோர்  உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். இது போன்ற மலை பகுதி தாழ்வான பகுதிகளில் வீடு கட்டி குடியோருவதை மக்கள் தவிர்க்க லேண்டும் என வலியுறுத்துகிறோம்.

எனவே பெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரித படுத்த வேண்டும். பெஞ்சல் புயல் மழையால் வாழ்வாதாரம் பாதிக்கபட்ட மக்களுக்கு ரேஷன் கார்டு களுக்கு நிவாரண உதவியாக ரூ 10,000 தமிழக அரசு தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.கஸ்டாலினை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments