புளியங்குடியில் நம்ம ஊரு சிலம்பம் கலைத் திருவிழா

 


 சஹாபா சிலம்பம் கிளப் மாஸ் கோல்டன் கராத்தே சிலம்பம் அகாடமி மற்றும் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் இணைந்து நடத்திய திருக்குறள் சொல்லிக்கொண்டே ஒரு மணி நேரம் சிலம்பம்  சுற்றி உலக சாதனை மற்றும் நம்ம ஊரு சிலம்பம் கலை திருவிழா நிகழ்ச்சி, புளியங்குடி  எம் எஸ் கே திடலில்  நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியை மாஸ் கோல்டன் கராத்தே தற்காப்பு அகாடமி தலைமை தாங்கி நடத்தியது.சஹாபா சிலம்பம் கிளப் நிர்வாகி டாக்டர் எம் அகமது ஜவாஹிர் அனைவரையும் வரவேற்றார். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ,மாஸ் கோல்டன் கராத்தே தற்காப்பு அகாடமி நிர்வாகி டாக்டர் எஸ் முகம்மது அசனுக்கு இன்டர்நேஷனல் ஜமேக்கா யுனிவர்சிட்டி வழங்கிய டாக்டர் ரைட் பட்டத்திற்கான  சான்றிதழை வழங்கினார். 

வாசுதேவநல்லூர் தொகுதி எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலை குமார் நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு நோபல் உலக சாதனை சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் புளியங்குடி நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி, பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் பொறியாளர் பி என் எம் மௌலல் கௌமி, துணைத் தலைவர் ஏ சாகுல் ஹமீது,செயலாளர் ஏ அபுதாஹிர், ஜமாலியா பள்ளிவாசல் தலைவர் காஜாமைதீன், புளியங்குடி முஸ்லிம் நல அறக்கட்டளை தலைவர் எஸ் சையது சுலைமான், முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய துணைத்தலைவர் புளியங்குடி அல் அமீன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் இ மை அப்துல் ரகுமான்,மாவட்ட முதன்மை துணைத் தலைவர் ஏ அப்துல் வஹாப், மாவட்ட துணைத் தலைவர் தி கலீல் ரகுமான், நகர பொருளாளர் முகமது அப்துல் காதர்,திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, எஸ் டி பி ஐ கட்சி வாசுதேவநல்லூர் தொகுதி தலைவர் அப்துல் ஹமீது, நகரத் துணை தலைவர் அகமது, மதிமுக நகர செயலாளர் ஜாகிர் உசேன்,நகர்மன்ற உறுப்பினர்கள் எம் ஷேக் காதர் மைதீன், ஆர். அப்துல் காதர் பீர்,பாத்து தமுமுக மாவட்ட செயலாளர் எம் எஸ் அப்துல் ரகுமான்,  பார்ட் அறக்கட்டளை தலைவர் முகைதீன்  வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் நகர தலைவர் பொறியாளர் ஜாகிர் உசேன் காங்கிரஸ்  தொழிலாளர் யூனியன் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ராபர்ட்  சுஜின் உட்பட ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்றனர். முடிவில் மாஸ் கோல்டன் கராத்தே அகாடமி நிர்வாகி டாக்டர் எஸ் முகம்மது அசன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments