கரூர் மாவட்டத்திலுள்ள புஞ்சைகாளக்குறிச்சியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி ரமேஷுக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ரேணுகாவுக்கு ஏற்கனவே புதுக்கோட்டையில் வசிக்கும் மெய்யர், கோவையில் வசிக்கும் லோகநாதன் ஆகியோருடன் திருமணம் நடந்தது ரமேஷுக்கு தெரியவந்தது. இதுகுறித்து தனது மனைவியிடம் கேட்டுள்ளார்.
அப்போது ரேணுகா நான் உன்னை விட்டு செல்ல வேண்டுமானால் 20 லட்ச ரூபாய் பணம் 20 பவுன் தங்க நகை கொடுக்க வேண்டும் என மிரட்டி உள்ளார். இதுகுறித்து ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ரேணுகா கோவைக்கு தப்பி செல்வதற்காக கரூர் பேருந்து நிலையம் வந்தார். அப்போது பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் ரேணுகாவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
ரேணுகாவுக்கும், அவரது முதல் கணவருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். மேலும் ரேணுகாவிற்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அதன் பிறகு லோகநாதன் ரமேஷை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். இந்த திருமணத்திற்கு புரோக்கர்களான ஜெகநாதன், ரோஷினி, பழனிகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மூன்று பேரை தவிர ரேணுகாவுக்கு வேறு யாருடனாவது திருமணம் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments