அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு..... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் நீர் நிரம்பி உள்ளது. அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி 36, ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.அமராவதி ஆற்று கரையோரப் பகுதியில் உள்ள பொது மக்கள் ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகள் மேய்ப்பது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

Post a Comment

0 Comments