கோயம்புத்தூரில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் மணிகண்டன் 2020 ஆம் ஆண்டு ஒரு ஷோரூமில் 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை. வாங்கியுள்ளார். அந்த காருக்கு 2 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார். இந்த நிலையில் 20 மாதங்களுக்கும் மேல் தவணை தொகை செலுத்தவில்லை என தெரிகிறது.
இதனால் மூன்று ஊழியர்கள் காரை எடுத்துச் செல்ல வீட்டிற்கு வந்தனர். அப்போது மணிகண்டன் காருடன் அங்கிருந்து தப்பி சென்றார். அதன் பிறகு வீட்டிலிருந்து பிரியா நாயை ஏவி நிதி நிறுவன ஊழியர்களை கடிக்க வைத்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் பிரியாவை கைது செய்தனர்.
0 Comments