சட்டமேதை அம்பேத்கரை அவதூறாக பேசிய அமிஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆண்டிபட்டி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.
அமித்ஷா பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ரயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சட்டமேதை அம்பேத்கரை பாராளுமன்றத்தில் இழிவாக பேசியதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டிபட்டி தொகுதி அமைப்பாளர் முத்துராமன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் சட்டமேதை அம்பேத்கரை இழிவாக பேசியதை கண்டித்தும் அமித்ஷா பதவி விலகக் கோரியும் மக்கள் விரோத மோடி அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் இருந்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
0 Comments