மாநில அளவில் நடந்த மேஜை பந்து போட்டியில் ஈரோடு மாவட்ட பாரதி வித்யா பவன் பள்ளி மாணவர் தங்கப்பதக்கம் பெற்று அசத்தல்


ஈரோடு மாவட்டம் ,  திண்டல் பாரதி வித்யா பவன் பள்ளி மாணவர் ரா.  பார்த்திபன் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை 40வது மாநில பாரதியார் தின விளையாட்டுப் போட்டியில் மேஜை பந்து ஒற்றையர் போட்டி பிரிவில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம், இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும்  பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவருக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் எல் எம் ராமகிருஷ்ணன், தலைவர் அருணா ராமகிருஷ்ணன், முதல்வர் ஸ்ரீதர், ஆசிரிய ஆசிரியைக ள் பாராட்டுக்கள் தெரிவித்தனர் . 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments