எனக்கு நிறைய பேர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர் - நடிகர் பவர்ஸ்டார்


 தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர். அதன் பிறகு இவர் தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். தற்போது இவர் ஆசையா? தோசையா? என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்னிலையில் அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதாகவும், அதற்காக ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பேசிய அவர் எனக்கு பணக்கஷ்டம், ஏமாற்றம், கவலை தான் நிறைய இருக்கிறது. எனக்கு நிறைய பேர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர். அதுல இருந்து மீள முடியாமல் உடம்பையும் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டேன். ஆனால் என்னுடைய ஃபேன்ஸ் என்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று அவர் உருக்கமாக பேசியிருந்தார்.

Post a Comment

0 Comments