அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவன்.... அமைச்சர் சொன்னது என்ன...?

 


இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் படத்தை தயாரிப்பது தாண்டி வேறு சில பிசினஸ்களையும் செய்து வருகின்றனர். நயன்தாரா அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். ஹோட்டல் பிசினஸ்களிலும் அடி எடுத்து வைக்க விரும்புவதாக தெரிகிறது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் இருக்கும் அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஹோட்டலை இயக்குனர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டுள்ளார். விலைக்கு தர முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆவது தர முடியுமா என்று விக்னேஷ் சிவன் கேட்டதற்கு அரசுக்கு சொந்தமான இடத்தை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது என புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments