எச்.ராஜாவின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு

 


பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதாவது பெரியார் குறித்து அவதூறு மற்றும் எம்பி கனிமொழி குறித்து அவதூறு ஆகிய வழக்குகளில் தனித்தனியாக 6 மாதக்காலம் சிறை தண்டனை என்று மொத்தம் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எச். ராஜா மேல்முறையீடு செய்திருந்தார்.

ஏற்கனவே அவருக்கு 30 நாட்கள் தண்டனை தொடர்பாக மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்து தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம் எச். ராஜாவின் தண்டனையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments