உணவு டெலிவரி செய்ய வந்த பெண்ணை ஆபாசமாக பேசிய இருவர் கைது

 


சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் நகர் பகுதியில் 34 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மனு கிருஷ்ணா என்பவர் பிரியாணி ஆர்டர் செய்து பேசி உள்ளார். அப்போது கிருஷ்ணா அந்த பெண்ணிடம் உங்கள் வாய்ஸ் ரொமான்டிக்காக உள்ளது என கூறினார். இதனால் அச்சத்தில் அந்த பெண் தனது கணவருடன் சென்று உணவை டெலிவரி செய்துள்ளார்.

அப்போதும் கிருஷ்ணாவும், அவரது நண்பர் விஷ்ணுவும் இணைந்து அந்த பெண்ணை ஆபாசமான வார்த்தைகளால் பேசி உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கிருஷ்ணா மற்றும் விஷ்ணு ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணா தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஷ்ணு போட்டோகிராபராக இருக்கிறார். இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Post a Comment

0 Comments