தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலப் பிரிவு அலுவலகம் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கலந்தாய்வு கூட்டம் க. புதுப்பட்டி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தின் தலைமை உரையை பேரூராட்சி தலைவர் திருமதி சுந்தரி பாஸ்கரன் அவர்கள் வழங்கினார்கள். பேரூராட்சி செயல் அலுவலர் திரு இளங்கோவன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதி சார்பாக திரு. சுரேஷ் குமார் இயக்குனர் சங்கமம் அறக்கட்டளை மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி மகளிர் கூட்டமைப்பு பிரதிநிதிகள், பேரூராட்சி செவிலியர் மற்றும் பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலர்கள், ஆசிரியர் பிரதிநிதி செந்தில்குமார் அவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி க.புதுப்பட்டி மற்றும் பத்திரிகை நண்பர்கள் கூட்டத்தில் உறுப்பினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் .
இந்த கூட்டத்திலே தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு குழந்தைகள் நலத்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கக்கூடிய உதவிகள் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குழந்தை திருமண ஒழிப்பு முறைகள் போன்றவற்றினை அரசு வழங்கியுள்ள 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் ரகசியம் அவசியம் காக்கப்படும் என்ற தகவலோடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் மூலம் கிடைக்கக்கூடிய நலத்திட்ட உதவிகளை பெற்றுத்தர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவு செயல்படும் என அந்தத் துறை அலுவலர் வனராஜா அவர்கள் விளக்கமாக எடுத்து கூறினார்கள்.
மிகவும் பயனுள்ள அரசு சார்ந்த திட்டங்கள் ஆகும் ஆகவே பேரூராட்சி பகுதியில் இடைநிற்றல் குழந்தைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான விழிப்புணர்வுகள் மற்றும் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது சம்பந்தமாகவும்காப்பகத்தில் சேர்ப்பது சம்பந்தமாகவும் விளக்கமாக தேனி மாவட்ட குழந்தைகள் நலப் பிரிவு அலுவலக அலுவலர் வனராஜா அவர்கள் எடுத்துக் கூறினார்கள். முடிவில் பேரூராட்சி அலுவலர் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
0 Comments