எம்எல்ஏ காரில் அமைச்சரின் தேசியக்கொடி.... எம்எல்ஏ-வின் ஆசையை தீர்த்து வைத்த அமைச்சர்......

 


 அமைச்சர் காரில் பறந்த தேசியக்கொடி திருவள்ளூர் எம்எல்ஏ காரில் மாறி ஏறி பறந்ததை பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்.இது அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் எதிரானது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கள ஆய்வு  மேற்கொள்வதற்காக சுற்றுலாத்துறை மற்றும் சக்கரைத் துறை அமைச்சர் ராஜேந்திரன் வியாழக்கிழமை வந்திருந்தார்.

காலை 9 மணிக்கு வந்த அவர், திருவள்ளூர் அடுத்துள்ள பாண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினரின் கெஸ்ட் ஹவுஸுக்கு வருகை புரிந்தார்.அந்த வழியாக யார் வந்தாலும் முதலமைச்சர் மு க ஸ்டாலினை இருந்தாலும் அவரது கெஸ்ட் ஹவுஸுக்கு வராமல் சென்றதில்லை.

அதேபோன்றுதான்  அங்கு வந்திருந்த அமைச்சர் ராஜேந்திரனுக்கு, திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் சிறப்பான வரவேற்பு அளித்து காலை சிற்றுண்டி வழங்கியுள்ளார்.மேலும்,அவருக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு மன மகிழ்ச்சியுடன் அங்கிருந்து.திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கள ஆய்வு செய்வதற்காக அமைச்சர் தயாராகினார்.

அப்போது அங்கிருந்த திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் விஜி ராஜேந்திரன், அண்ணே.. அண்ணே... நானும் அமைச்சராக விரும்புகிறேன். எனது காரில் தேசியக்கொடி ஏற்றி வர ஆசைப்படுகிறேன். எனவே உங்கள் காரில் உள்ள தேசிய கொடியை எனது காருக்கு மாற்றி நாம் இருவரும் செல்வோம் என வேண்டுகோள் வைத்துள்ளார் விஜி ராஜேந்திரன்.

 அதற்கென்ன... இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற பட டயலாக் படி அமைச்சரும் தனது காரில் இருந்த தேசியக் கொடியை எம்எல்ஏவின் கார் எண் 5556 என்ற காரில் மாற்றுமாறு அவருடன் வந்த டிரைவரிடம்  கட்டளை யிட்டுள்ளார்.அதன்படி அமைச்சர் காரில் இருந்த கொடி கழற்றப்பட்டு எம்எல்ஏ காருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த காரில் எம்எல்ஏவும், அமைச்சரும் ஜோராக அமர்ந்து கொண்டு திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வந்தனர்.  ஆலைக்குள்ளே கார் சென்றது.அங்கு அவர்களை வரவேற்பதற்காக காத்திருந்த உயர் அதிகாரிகள் அபூர்வ, சக்கரைத்துறை செயலாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர், திருத்தணி வருவாய் கோட்ட அலுவலர், திமுக நிர்வாகிகள், செய்தியாளர்கள் புகைப்பட கலைஞர்கள் ஆகியோர் எம் எல் ஏ காரில் அமைச்சரின் கொடி பறந்ததை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்துக் கொண்டனர்.

 இது சட்டப்படி எவ்வளவு தவறு என்பதை அமைச்சரும் சட்ட பேரவை உறுப்பினர் விஜி ராஜேந்திரனும் உணராமல் தமிழக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளனரே!அமைச்சரிடம் சிலர் ரகசியமாக கேள்வி கேட்டபோது, எம்எல்ஏக்கள் கார் தான் என்னுடைய கார் என வேடிக்கையாக பதில் அளித்துள்ளார்.

அரசியல் சாசனம், ரகசிய பிரமாணத்துக்கு எதிரான பெரிய தவறை இழைத்துள்ள இருவர் மீதும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இல்லை எனில் யார் வேண்டுமானாலும் தேசிய கொடியை தங்களது வாகனங்க பயன்படுத்த முன் உதாரணமாக அமைந்து விடும் எனஅரசியல் நோக்கர்கள், வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments