திருவள்ளூர் மாவட்ட காவல் துறையில் துப்பறியும் படைப்பிரிவில் பணியாற்றிய லக்கி என்ற மோப்பநாய் வயது மூப்பின் காரணமாக உயிரிழப்பு


திருவள்ளூர்  மாவட்ட காவல் துறையில் துப்பறியும்  படைப்பிரிவில்  லக்கி என்ற மோப்பநாய் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தது.இந்த மோப்ப  நாய் இதுவரை 137  இடங்களில் வெடிகுண்டுகள்  துப்பறியும் பணிக்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆவடியில் நடைபெற்ற தமிழ்நாடு காவல்துறை மாநில அளவிலான திறனாய்வு போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்று திருவள்ளூர் மாவட்ட காவல் பிரிவுக்கு பெருமை சேர்த்தது.

 இந்நிலையில் லக்கிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஆண்டு 2023  அக்டோபர் மாதம்  பணி ஓய்வு அளிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டதுப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவில்  பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று லக்கி மோப்ப நாய்  உயிரிழந்தது.திருவள்ளூர் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் லக்கி உடல் அஞ்சலைக்காக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் வைக்கப்பட்டது.

உயிரிழந்த லக்கி மோப்ப நாய்க்கு திருவள்ளுர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மலர் வளையம் வைத்து அஞ்சலை செலுத்தினர்.பின்னர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மைதானத்தில் இறுதி மரியாதை செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments