சமையல் செய்யாத மகளை குக்கரால் அடித்துக்கொன்ற தந்தை

 


குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் முகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தற்போது முகேஷ் சரியாக வேலைக்கு செல்லவில்லை. இவருக்கு மனைவி 18 வயதுடைய கடாளி என்ற மகள் இருந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று  முகேஷின் மகள் சமையல் வேலையை செய்யாமல் பிற வேலைகளை பார்த்து வந்துள்ளார் இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபத்தில் முகேஷ் குக்கரால் தனது மகளின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதனால் சம்பவ இடத்திலேயே ரத்தம் அதிகமாக வெளியேறி சிறுமி உயிரிழந்தார். இதற்கிடையே சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments