நெல்லை: கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து திமுக பிரமுகர் உயிரிழப்பு

 


நெல்லை மாவட்டம் வள்ளியூர் சொக்கநாதர் கோவில் பகுதியில் முருகன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பாத்திர கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையம் அருகே வந்தபோது, புதிதாக கட்டிட வேலைகள் நடக்கும் பேருந்து நிலைய கழிவு நீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

இதனை யாரும் பார்க்கவில்லை என்பதால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின் மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் முருகன் கழிவுநீர் தொட்டியில் கிடப்பதை கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன முருகன் திமுகவில் வள்ளியூர் நகர பொருளாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments