பாவூர்சத்திரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பவனி : வாழ்த்து கூறி இனிப்புகள் வழங்கினர்


பாவூர்சத்திரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பவனி நடத்தப்பட்டது. உலகமெங்கும் கிறிஸ்து பிறப்பின் பண்டிகை டிசம்பர் 25 ஆம் தேதி புதன்கிழமை கொண்டப்பட்படுகிறது. இதை முன்னிட்டு கிறிஸ்துவர்கள் வீடுகளில் ஸ்டார், குடில்,கிறிஸ்துமஸ் மரம் போன்றவற்றை அலங்கரிப்பர். மேலும் தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். 

கிறிஸ்துமஸுக்கு முந்தைய வாரங்களில் ஆலயங்களிலிருந்து வீடுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுவர். மேலும் கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பவனி நடத்தப்படும். இதன்படி கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பவனி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பவனியில் கலந்து கொண்டனர்.

 வழிநெடுகஅவர்களை வரவேற்ற மக்களுக்கு கை குலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி இனிப்புகள் வழங்கினர். ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இசையுடன் கூடிய கிறிஸ்து பிறப்பின் பாடல்கள் பாடப்பட்டது. பாவூர்சத்திரம் சிஎஸ்ஐ ஆலயத்திலிருந்து புறப்பட்ட பவனி பாவூர்சத்திரம் நெல்லை - தென்காசி பிரதான பகுதி, கடையம் ரோடு விஏ நகர்,சுரண்டை ரோடு குறும்பலாப்பேரி விலக்கு வரை சென்றனர். ஏற்பாடுகளை சேகர குருவானவர் பர்னபாஸ், சபை ஊழியர் தினகர் சந்தோஷசிங் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments