மயிலாடுதுறை மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பரமசிவம்,மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உமாநாத் ஆகியோர் இப்போட்டிகளை துவக்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இப்போட்டி கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் உலகநாதன் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது பெண்கள் 200 நபர்களும் ஆண்கள் பிரிவில் 240 மாணவர்களும் கலந்துகொண்டு விளையாடினார்கள் சிலம்பப் போட்டியில் இரட்டைக் கம்பு வீச்சு,ஒற்றைக் கம்பு வீச்சு,தொடு சிலம்பம் போன்ற மூன்று விதமான போட்டிகளில் நடத்தப்பட்டது. இந்த மூன்று போட்டிகளிலும் பெண்கள் ஆண்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் சிறப்பாக விளையாடினர்.
0 Comments