சொகுசு கப்பலில் சோதனை ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

 


கோவா கடற்கரை அருகே, 'ப்ரைடு' என்ற சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இக்கப்பலின் இயக்குனர் அசோக் வாடியா மீது, பண பரிமாற்ற மோசடி புகார் எழுந்த நிலையில், அது குறித்து சோதனை நடத்த அமலாக்கத்துறை உதவி இயக்குனர் சென்ன கேசவ ராவ் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 12ம் தேதி சென்றனர்.

சொகுசு கப்பலின் உள்ளே சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளை, கப்பல் இயக்குனர் அசோக் வாடியா உத்தரவின்படி கப்பல் ஊழியர்கள் கோபால் ராம்நாத் நாயக், ஆரத்தி ராஜா உள்ளிட்ட சிலர் இணைந்து தாக்கினர்.அதன்பின் அங்குள்ள அறையில் அடைத்து வைத்தும் சித்ரவதை செய்தனர்.

இதற்கிடையே தகவலறிந்து வந்த போலீசார், கப்பல் ஊழியர்களின் பிடியில் இருந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை பத்திரமாக மீட்டனர்.சொகுசு கப்பலில் நடத்திய சோதனையின்போது கிடைத்த ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், தங்கள் மீது கப்பல் இயக்குனர் மற்றும் ஊழியர்கள் தங்களை தாக்கியதாக, பாதிக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

Post a Comment

0 Comments