நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது திருப்போரூர் முருகன் கோவிலில் உண்டியலில் தவறுதலாக ஐபோன் விழுந்தது. அதை தர மறுப்பது நியாயம் கிடையாது. கோவில் உண்டியலில் வெடிகுண்டு விழுந்தால் என்ன செய்வார்கள் என நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து எங்களுக்கு என்ன பயம்? அவர் என்ன ஆரியப்படை தலைவரா பணம் கொடுத்தால்தான் திமுகவினர் வேலை செய்வார்கள். திமுக தான் எனது எதிரி என கூறியுள்ளார்.
0 Comments