தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி பிரிவிலிருந்து வைகைஆறு செல்லும் வழியில் உள்ள கல் மற்றும் கிராவல் குவாரியில் இருந்து தயாரிக்கப்படும் ஜல்லிக்கற்கள் மற்றும் கிராவல் ஆகியவை இரண்டு கிலோ மீட்டர் தூரம் விவசாய நிலங்களின் நடுவே உள்ள பாதை வழியாக பிரதான சாலைக்கு கொண்டு வரப்படுகிறது.
வரும் வழியில் இருபுறங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய விலை நிலங்களில் குவாரி லாரிகளில் இருந்து வெளிவரும் தூசிகளால் விவசாய பயிர்கள் முழுவதும் பாதிக்கப்படுவதாகவும் விளைச்சல் பாதிக்கப்படுவதாகவும் எந்த நேரமும் வெடி வைப்பதால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.மேலும் கல்குவாரியில் இருந்து வெடி வெடிக்கும் போது வெளிவரும் கற்கள் தூசுக்கள் ஆகியவை விவசாய நிலங்களில் நிரந்தரமாக படிந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.இது குறித்து பலமுறை இப்பகுதி விவசாயிகள் குவாரி உரிமையாளர்கள் கனிமவளத்துறையினர் காவல்துறையினர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் கடும் கோபம் அடைந்த விவசாயிகள் இன்று குவாரிக்கு செல்லும் பாதையில் கற்கள் கட்டைகள் முட்களை போட்டு வழிமறித்து பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமனூர் போலீசார் பாதையில் போட்டு அடைத்து இருந்த கற்கள் கட்டைகளை எடுக்க முயற்சித்தனர்.அப்போது பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் போலீசாருடன் கற்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து.போலீசார் மற்றும் குவாரியின் உரிமையாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பேசியதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.விவசாயிகளின் போராட்டத்தால் இன்று தேக்கம்பட்டி அடைக்கம்பட்டி பகுதியில் உள்ள கல் மற்றும் கிராவல் குவாரிகள் செயல்படவில்லை.மீண்டும் போராட்டம் நடைபெற வாய்ப்பிருப்பதாவரப்படுகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments