செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது என்று சொன்னதற்கு தான் நாட்டில் உள்ள பலருக்கு கோபம் வருகிறது. பொதுவாகவே நமது சமுதாயத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது. குப்பைகள் போன்ற எதுவாகினும், அதை ஏரியில் தான் கொட்டுகிறார்கள். ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் குப்பைகளை கொட்டி கொட்டி, பாலாறே மிகவும் மோசமாகிவிட்டது. ஆகையால், மக்களுக்கு அந்த விழிப்புணர்வு வர வேண்டும்.
குப்பைகளை அள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால், அந்த குப்பைகளை எங்கே கொட்ட வேண்டும் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அதனால், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் மக்கள் குப்பைகளை கொட்டக் கூடாது. மழை இல்லை என்று யார் சொன்னது. ஆரஞ்சு போட்டாலும் சரி, ஆப்பிள் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும். எந்த குறையும் நான் சொல்ல விரும்பவில்லை குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யப்படும்.
0 Comments