திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களாக திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவராக உமா மகேஸ்வரி இருந்து வருகிறார் துணைத் தலைவராக தேசிங்கு உள்ளார் தேர்தல் நடைபெற்றதிலிருந்து மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் முறையாக நடைபெறுவதில்லை.
நடைபெற்றாலும் ரகசிய கூட்டமாகவே நடைபெற்றது பத்திரிகையாளர்கள் அனைவரும் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் இதைக் குறித்து அதிமுக கவுன்சிலர்கள், பாமக கவுன்சிலர்கள், குரல் கொடுத்தும் எவ்விதப் பயனும் இல்லை .
கடந்த ஐந்து வருடங்களாக 23 முறை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசுவதற்கு சுதந்திரமும் இல்லை வெளிப்படையான நடவடிக்கையும் இல்லை ஒவ்வொரு கூட்டத்திலும் வரவு செலவு கணக்குகள் தீர்மான புத்தகங்கள் ஊராட்சியின் செயல்பாடுகள் திட்டங்கள் செயல்படுவது குறித்து விவாதிக்கப்படுவதில்லை இது குறித்து கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதற்கு உரிய பதில் உமா மகேஸ்வரி தெரிவிப்பதும் இல்லை இதனால் திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்தனர் இதில் அதிமுக கவுன்சிலர்கள் பாமக கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர் அமைச்சர் மாநில உயர் அதிகாரிகள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஒவ்வொரு கூட்டத்திலும் மாவட்ட கவுன்சிலர்களுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சமாக வழங்கப்பட்டு வந்தது வெளிப்படையான மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரகசிய கூட்டம் என்ற பெயரில் உள்ளே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பேசுவதற்கு சுதந்திரமும் இல்லை வெளிப்படையான நடவடிக்கையும் இல்லை இக்கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் தீர்மான புத்தகங்கள் ஊராட்சியின் செயல்பாடுகள் திட்டங்கள் எதுவுமே செயல்படுத்துவது இல்லை இது குறித்து கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதற்கு உரிய பதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி தெரிவிப்பது இல்லை இதனால் அடிக்கடி மாவட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து வந்தனர்.முறையான திட்டங்கள் எதுவுமே வகுக்கப்படவில்லை மாவட்ட ஊராட்சி குழுவிற்கு வருகின்ற நிதி குறித்து அதற்கு விபரமும் தெரிவிக்கப்படவில்லை நிதிகள் கவுன்சிலர்களுக்கு பாரபட்சமாக வழங்கப்படுவதும்,
ஊராட்சி குழு தலைவர்,துணைத் தலைவர் அதிக அளவில் நிதி எடுத்துக்கொண்டு பணிகள் செய்யாமலே பணிகள் செய்ததாக முறைகேடுகள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். எதற்கும் விளக்கமும் இல்லை ஆதாரமும் இல்லை கூட்டங்களும் வெளிப்படை தன்மையும் இல்லை கடந்த ஐந்து வருடங்களாக ஜனநாயகத்தை மீறி ரகசிய கூட்டம் நடத்தி மாவட்ட ஊராட்சிக்கு ஒதுக்கிய நிதி எவ்வித வெளிப்படைத் தன்மை இல்லாமல் கோடிக்கணக்கில் பல்வேறு முறை கேடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது நடைபெற்று வந்தது திமுக ஆட்சி ஏற்பட்டவுடன் ஊராட்சி குழு தலைவர் சர்வ அதிகாரி போன்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் செயல்படுவதாக கவுன்சிலர்கள் தங்கள் கருத்துக்களை வெளியே தெரிவித்தனர்.
கூட்டத்தில் ஒருமையாக பேசுவதும் கட்சி ரீதியாக பேசுவதும் தனது வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தார் 50,000 ற்கும் மேற்பட்ட மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதிகளை முறையாக ஒதுக்காமல் தனது தொகுதிகளிலேயே கும்மிடிப்பூண்டி தொகுதியில் கட்சிக்காரர்களுக்கு மறைமுகமாக ஒதுக்கீடு செய்து மாவட்ட ஊராட்சியில் நிதியை பல்வேறு வழிகளில் சுருட்டி உள்ளார். இதேபோன்று வரவு செலவு கணக்குகள் கடந்த ஐந்து வருடங்களாக ஊராட்சி கூட்டத்தில் காட்டப்படுவதில்லை.
தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதும் இல்லை, பெயரளவில் நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்து பெறுவதும் வாடிக்கையாக செயல்படுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 24 கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலைமையை ஊராட்சி குழு தலைவர் ஏற்படுத்தியுள்ளார்.
பாரபட்சமாக நிதியை ஒதுக்கீடு செய்வதும் மக்களுக்கு பயன்படாத பணிகளை தேர்வு செய்வதும் கட்சிக்காரர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதும் விதிகளை மீறி மாவட்ட ஊராட்சியில் அனைத்து முறைகேடுகளுக்கும் தலைமை தாங்கி செயல்படுத்தி வந்தார் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதும் பணிகளை தேர்வு செய்வதும் நிதிகளை கையாள்வதும் தொடர்ந்து ஐந்து வருடங்களாக செயல்பட்டு வந்தார் இது குறித்து முதலமைச்சர் முதல்,உள்ளாட்சித் துறை அமைச்சர், உள்ளாட்சித் துறை செயலாளர்,மாவட்ட ஆட்சியர்,மாவட்ட திட்ட அலுவலர்,இயக்குனர், அனைவரிடம் புகார் கொடுக்கப்பட்டு கவுன்சிலர்கள் போராடி வருகின்றனர். விடியல் ஆட்சியில் புகார் கொடுத்தாலே விடியல் காணப்படும் எனும் கூறும் மு. க.ஸ்டாலின் முன்னாள் மாவட்ட செயலாளர் மகள் உமா மகேஸ்வரி, சர்வாதிகாரி, போன்று மாவட்ட ஊராட்சியில் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் நாசர் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் கண்டு கொள்ளாதது ஏன்?உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காததால் மாவட்ட கவுன்சிலர்கள் மாவட்ட ஊராட்சியை கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத விடியல் ஆட்சியை கண்டித்தும் மாபெரும் மக்கள் இயக்கம் போராட்டமாக கவுன்சிலர்கள் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மக்களின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்த பாதிக்கப்பட்ட கவுன்சிலர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர் . சென்ற ஆட்சிக் காலங்களில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அனுமதிக்க பெற்று வந்தது இந்த முறையை மாற்றிய உமா மகேஸ்வரி செயல் கண்டிக்கத்தக்கது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூட்டமா?உமா மகேஸ்வரி ரகசிய கூட்டமா? மாவட்ட நிர்வாகம் மாநில உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் தணிக்கை துறை அதிகாரிகள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தால் பல்வேறு முறைகேடுகள்,
விதிமீறல்கள், அனைத்து மோசடிகள் வெளிச்சத்துக்கு வரும் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர். மாவட்ட ஊராட்சி மீது மாநில உயரதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும் 50 கோடி வரையில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். மக்கள் வரிப்பணத்தை முறையாக மக்களிடத்தில் சேர விடாமல் மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்கள் தேர்வு செய்யாமல் தன் சுயநலங்களுக்காக திட்டங்கள் தேர்வு செய்து பணிகள் செய்யாமலேயே பணிகள் செய்ததாக எம் புக் பதிவு செய்து கோடிக்கணக்கில் முறைகேடுகள் செய்ததாக தெரிய வருகிறது இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் பணிகள் குறித்து ஆய்வு செய்தும் ஊராட்சி குழு தலைவர் முறைகேடுகள் விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர மாவட்ட திருவள்ளூர் மாவட்ட சமூக அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
0 Comments