ஆண்டிபட்டியில் மருத்துவர் சங்க பூமிபூஜை விழா நடைபெற்றது


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் மருத்துவர் சமுதாய மக்களுக்கு  தமிழக அரசால் 1999 ஆம் ஆண்டு 105 பேர்களுக்கு  வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது . 

 இவ்விடத்தினை டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நகர் என பெயர்சூட்டி பூமிபூஜை நடைபெற்றது.இவ்விழாவிற்கு தேனிமாவட்ட நவசமாஜ் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

தேனிமாவட்ட நல வாரிய உறுப்பினரும் , தேனி மாவட்ட தலைவருமான  கணேசன்,  நிர்வாகி  கருப்பையா  ,   முருகேசன்  , கே . பி. ஆர்  மருத்துவமனை தலைவர்  பாண்டியன் ,  முன்னிலை வகித்தனர் . 

 மருத்துவ நகரசங்க தலைவர்  மாணிக்கவாசகம்  , செயலாளர் கணேசபாண்டி ,  பொருளாளர்  கார்த்திகேயன் ,  ஒருங்கிணைப்பாளர்  செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்  அனைவரும் நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments