கும்மிடிப்பூண்டி: அம்பேத்கரை அவமதித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 


சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமரியாதையாக  பேசியதாக கூறி கும்மிடிப்பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சண்முகமணி வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதிகள் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி எம்.எல். சுகுமார், ஒன்றிய செயலாளர் புலியூர் ஆனந்தன், ஒன்றிய பொருளாளர் சுதேசன் , விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பேட்டை குமார், வின்சென்ட் சுதாகர், மகளிர் அணி நிர்வாகிகள் மதனா ,காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் நீலமேகம் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நகர துணை செயலாளர் அரவிந்த் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments