நாகை அருகே தேவூரில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்பன் வீதி உலா


நாகப்பட்டினம் மாவட்டம் தேவூர் பிடாரி அம்மன் ஆலயத்தில் மார்கழி பிறப்பை முன்னிட்டு மகாசக்தி ஐயப்பன் சேவா சங்கம் சார்பில் சிறப்பு ஐயப்பன் 18ஆம் படி பூஜை  நடைப்பெற்றது. 

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் சாமி ஆலயத்தில் இருந்து மேலத் தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து  பஜனை பாடல்கள் பாடி மாலை போட்ட  ஐயப்ப பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து ஐய்யப்ப சாமிக்கு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மக்கள் நேரம் எடிட்டர் & நாகை மாவட்ட நிருபர் 

ஜீ.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments