திருவள்ளூர் அடுத்த மப்பேடு சமத்துவபுரத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1800 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பணியானது கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.அப்பகுதியில் தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தங்க வைத்து கட்டுமான பணிகள் ஆனது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் காலை மேற்கு வங்காளம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ராஜேஸ்வர் -54 வழக்கம்போல் கட்டுமான தொழிலாளர்கள் பிரிவுக்காக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 9 வது தளத்தில் வெளிப்புறமாக சிமெண்ட் கலவை பூசு வேலை பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.அப்போது பணியில் ஈடுபட்டிருந்த அவர் தடுமாறி ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடன் பணியாற்றி வந்த சக தொழிலாளர்கள் உதவியுடன் மப்பேடு காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments