திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவரும் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்த நிலையில் இவர்கள் நேற்று ரிங்க் ரோடு அருகே உள்ள ஒரு உயர்மின் கோபுரத்தில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்க சென்றனர்.
இங்கு நேற்று பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இருவரும் உயர் மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி சரி செய்து கொண்டிருந்தனர். இவர்கள் வேலை செய்ததால் மின்சாரத்தை துண்டித்த நிலையில் கலாமணி மேலே நின்று பழுது பார்க்க மாணிக்கம் கீழே நின்று உதவி செய்தார். அப்போது ஒரு வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் கலாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு மாணிக்கம் மின்சாரம் பாய்ந்து கீழே தூக்கி வீசப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments