நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது


 ஈரோடு மாவட்டம் ,  நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது.இதில் நம்பியூர், அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானி, தாளவாடி, பெருந்துறை , மொடக்குறிச்சி, சத்தியமங்கலம்,உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்   உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் உள்ள மாணவர்கள் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தனிநபர் சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றன இதில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இதன் துவக்க விழா நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சாலமன் தலைமை தாங்கினார்.நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ்,வேகமா பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவரும் ,  நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர் மெடிக்கல் ப. செந்தில்குமார் சிலம்பாட்ட போட்டிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் நம்பியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா,ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments