காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அவருடைய உடல் நலம் முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் அவருடைய உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிய தகவல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments