நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா...? தமிழக அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம்


 கடந்த ஆட்சியில் போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுக்கப்பட்டார். இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர்  அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த முறை அறிவுறுத்தியும் வழக்கறிஞர் மாறிவிட்டார் என கூறுவதை ஏற்க முடியாது எனவும், "நீதிமன்றத்தில் விளக்கம் பெறுவதாக உறுதி அளித்த பின்னர் அதற்கு முரணாக செயல்படுவது ஏற்புடையதல்ல" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா? என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.எனவே, வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் சாட்சிகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Post a Comment

0 Comments