பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் செந்தில் பாலாஜியும் நானும் உறவினர்கள் என்று கூறினார். இது பற்றி அவர் பேசியதாவது, வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற நபர் எனக்கு ரத்த சொந்தமில்லை. ஆனால் கொங்கு பகுதிகளை பொறுத்தவரையில் அனைவரும் உறவினர்களாகவே இருப்போம். நானும் செந்தில் பாலாஜியும் உறவினர்கள். ஒரே கோவிலுக்கு செல்பவர்கள். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக செந்தில் பாலாஜி என்னுடைய வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டுள்ளார். நானும் காங்கிரஸ் எம்பி ஜோதி மணியும் உறவினர்கள்.
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக ஜோதிமணி அக்கா வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டுள்ளேன். கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான பாதி பேர் என்னுடைய உறவினர்கள் தான். நான் வருமானவரித்துறை சோதனையில் தலையிட்டால்தான் தவறு அது பற்றி என்னிடம் கேள்வி கேட்கலாம் என்றார். மேலும் நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள் என்று அண்ணாமலை கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
0 Comments