தமிழகம் முழுவதும் சலுன்களில் ஜனவரி 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. அதாவது தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவ சமூகம், முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது விலைவாசி உயர்வு காரணமாக முடி திருத்தும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர். அதன்படி முடித்திருத்தம் ஏசி இல்லாத கடைகளில் கட்டிங் செய்ய 120 முதல் 130 ரூபாய் வரையிலும், சேவிங் செய்ய 60 முதல் 70 ரூபாய் வரையிலும் கட்டணம் உயர்த்தப்படும்.
அதன் பிறகு கட்டிங் மற்றும் சேவிங் இரண்டிற்கும் சேர்த்து 180 முதல் 200 ரூபாய் வரையிலும், சிறுவர்களுக்கு முடிவெட்ட 100 முதல் 120 வரையிலும், தாடி ஒதுக்குதலுக்கு 80 முதல் 100 ரூபாய் வரையிலும், முடி டை அடிக்க 150 முதல் 200 ரூபாய் வரையிலும், தலை மசாஜ் செய்ய 150 முதல் 200 வரையிலும், பேஸ் ப்ளீச்சிங் செய்ய 200 முதல் 250 வரையும் கட்டணம் உயர்த்தப்படும். மேலும் பேசியல் செய்வதற்கு 300 முதல் 400 ரூபாய் வரையிலும், காம்போ பேக்கேஜ் செய்வதற்கு 10 சதவீதம் சலுகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments