மாற்று கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பதவி கிடையாது..... தவெக அறிவிப்பு

 


தமிழக வெற்றி கழகத்தில் யாருக்கெல்லாம் பதவி வழங்கப்படும் என்பது குறித்து நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். அதாவது தமிழக வெற்றிக்கழகத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு எந்த காரணத்தை கொண்டும் பதவி வழங்கப்பட மாட்டாது. பல்வேறு மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக தமிழக வெற்றி கழகத்தில் வந்து இணைகிறார்கள். அவர்களை நாம் மதிப்போம் அரவணைப்போம். மற்றபடி கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து சைக்கிள் மிதித்துப் போய் போஸ்டர் ஒட்டிய தொண்டர்களுக்கு மட்டும்தான் பதவி வழங்கப்படும். இதில் நம் கட்சியின் தலைவர் விஜய் உறுதியாக இருக்கிறார்.

கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு மட்டும்தான் தமிழக வெற்றி கழகத்தில் பதவி வழங்கப்படும் எனவும் மாற்று கட்சியில்  இருந்து வருபவர்களுக்கு பதவி வழங்கப்பட மாட்டாது எனவும் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளது தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழக வெற்றி கழகம் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments