• Breaking News

    நாகப்பட்டினம் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி வழிந்து தெருக்களுக்கு பாதிப்பு கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்


     நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு பச்சை பிள்ளையார் குறுக்குத் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி வழிந்து தெருக்களில் செல்கிறது.புழு பூச்சிகள் அதில் தென்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி பலமுறை நகராட்சியிடம்  புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது. 

    கழிவு நீர் சாக்கடையால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக  நகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் மெத்தனப் போக்கில் செயல்படுவதால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.


    நாகப்பட்டினம் செய்தியாளர் : ஜீ.சக்கரவர்த்தி

    No comments