மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த தம்பதிகள் ஆதரவற்ற முதியவருக்கு மறுவாழ்வு அளித்த தருணம்


மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் பல ஆண்டுகளாக எந்த ஆதரவும் இல்லாமல் யாசகம் எடுத்து வாழ்ந்து வரும் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் A ராமு இப்பொழுதும் வயது முதிர்வு காரணமாக கண் பார்வை குறைபாடு சற்று உடல்நலம் குறைவு இதுபோல பல இன்னல்களில் தவித்து வரும் முதியவருக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று அங்குள்ள பொதுமக்கள் எங்கள் பாசத்துக்குரிய தம்பி ஆதி அவர்கள் தொடர்பு கொண்டு கூறினார்கள்.

 உடனடியாக அங்கு சென்ற மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம் சேவை குழுவினர்கள் விவரங்களை சேகரித்த பொழுது அவர் திருமணம் ஆகவில்லை எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கின்றேன் எனக்கு உங்களால் முடிந்த மறுவாழ்வு தாருங்கள் என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார் .

அவருக்கு முதற்கட்ட உதவியாக முடி திருத்தம் செய்து குளிக்கவைத்து புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றியுள்ளோம் அங்குள்ள பொதுமக்கள் கூறுகையில் அவர் இங்குதான் பல வருடங்களாக இருக்கின்றார் அவருக்கு எந்த ஆதரவும் இல்லை அவரை ஒரு முதியோர் காப்பகத்தில் சேர்த்து அவருக்கு மறுவாழ்வு அளித்து கொடுங்கள் என்று நம்மிடம் உதவி கேட்டு இருக்கின்றார்கள் நம்மளால் முடிந்ததை செய்து தருகின்றோம் என்று கூறி வந்திருக்கின்றோம் இதைப் பார்க்கக் கூடிய நல்ல உள்ளங்கள் அதிகமாக பகிருங்கள் அவர்கள் உறவினர்கள் யாராக இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் நம்மளால் முடிந்த உதவியை அவருக்கு செய்து தருவோம் உறவுகளே ஆதரவு தாருங்கள் தொடர்ந்து நல்லதே செய்வோம் இந்த மக்கள் சேவை செய்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த அங்குள்ள பொதுமக்கள் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.. 

தொடர்புக்கு-8754816938

Post a Comment

0 Comments