அரசு பேருந்து டிரைவர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்


 தமிழகத்தில் அண்மை காலமாக, அரசு பஸ் டிரைவர்கள் செல்போனை பயன்படுத்திக் கொண்டே, பஸ் ஓட்டும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதனால் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் அலட்சியமாக இருக்கும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு டிரைவர்களுக்கு தெரியும்படி அனைத்து நோட்டீஸ் போர்டுகளில் குறிப்பிட வேண்டும் என்று போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்போனை பயன்படுத்தியபடி பஸ்களை இயக்கும் டிரைவர்களின் வீடியோக்கள் வெளியாவதை அடுத்து போக்குவரத்துத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Post a Comment

0 Comments