கேரளாவில் இருந்து மூட்டை மூட்டையாக வரும் புற்றுநோய் மருத்துவ கழிவு..... பொதுமக்கள் அச்சம்

 


கேரளாவில் இருந்து தென்காசி, நெல்லை மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அவ்வப்போது காவல்துறையினர் எல்லைகளில் சோதனை செய்தனர். இந்நிலையில் திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே உள்ள பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவை அனைத்தும் புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள் என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே எல்லைகளில் சோதனையை அதிகரிக்கவும், கழிவுகளை அகற்றவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையம் மற்றும் ஒரு தனியார் மருத்துவமனையின் கழிவுகள் என்று தெரியவந்துள்ளது. இரவு நேரங்களில் மர்ம நபர்கள் லாரியில் இந்த கழிவுகளைக் கொண்டு வந்து இந்த பகுதியில் கொட்டியுள்ளனர். இதை கொண்டு சென்றது மட்டுமல்லாமல், சில இடங்களில் தீ வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இது போன்ற கழிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அதில் மருத்துவ களைவுகளை பார்வையிட்டு, அந்த கழிவுகளில் உள்ள மருத்துவமனையின் முகவரி உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, கேரளாவில் இருந்து இங்கு எப்படி கழிவுகள் வருகின்றது. இதை அதிகாரிகள் கவனிக்காமல் விட்டுவிட்டனர். குப்பைகள் இவ்வாறு கொட்டப்படுவதை தவிர்க்க நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும். இது 2,3 தினங்கள் கழித்து துர்நாற்றம் வீசக்கூடிய நிலையில் உள்ளது. மருத்துவக் கழிவுகளை உடனே அப்புறப் படுத்துவில்லை என்றால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் என்று தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments