திருவள்ளூர் மாவட்டம்கும்மிடிப்பூண்டி ஒன்றியம்ரெட்டம்பேடு. கிராமத்தில் ஐயப்பா சேவை சங்கம் ஆர், கே, குருசாமி தலைமையில் ஐயப்ப பூஜை விமர்சையாக நடைபெற்றது . ஐயப்பன் சிலை புலி வாகனத்தில் அமர்ந்து வடிவில் அலங்காரம் செய்யப்பட்டது சீனிவாசன் சம்பத் குருக்கள் தலைமையில் மந்திரங்கள் நடத்தி.தொடங்கி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆர்,கே ,குருசாமி தலைமையில் கொருக்குப்பேட்டை சேர்ந்த.ஐயப்பன் பாடகர் குழு வரவைக்கப்பட்டது விநாயகர் முருகர் அம்மன் சிவன் பல்வேறு பாடல்களை பாடினார்கள்.
இதில் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த குருவிஅகரம். வழிதிலம்பேடு கும்மிடிப்பூண்டி சேர்ந்த ஐயப்பன் பக்தர்கள் கலந்து கொண்டு பாட்டு பாடினார்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது ஆர், கே, குருசாமி அவர்களுக்கு உடன் வந்தவர்களுக்கும் ஐயப்பா சேவை சங்கம் சார்பில் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 18 இன்று ரெட்டம்பேடு உள்ள விநாயகர் கோவிலில் ஆர்.கே. குருசாமி தலைமையில் சுமார் 35 ஐயப்ப சாமிகள் யாத்திரை பயணம் மேற்கொண்டனர் அவர்களுக்கு குருசாமி இருமுடி கட்டி வழி அமைத்து வைத்தார்.
0 Comments