ஈரோடு மாவட்டம் , நம்பியூரில் திமுக இளைஞர் அணி செயலாளரும் , தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நம்பியூர் சிவசக்தி திருமண மண்டபத்தில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தண்டபாணி , நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் ப. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர் கீதாமுரளி மற்றும் சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பா.அல்லாபிச்சை ஏற்பாட்டில் உடல் ஊனமுற்றோருக்கு அரிசி பருப்பு காய்கறிகள் உதவி தொகை ரூ.1000 /- புடவை ஆகிய தொகுப்பு நலத்திட்ட உதவிகளை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொது குழு உறுப்பினர் எம் எஸ் சென்னிமலை, நம்பியூர் பேரூர் செயலாளர் ஆனந்த குமார், மாவட்ட கலை இலக்கிய பேரவை இணை செயலாளர் முருகசாமி மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments