உங்க மொபைலில் இந்த Apps இருந்தா டெலிட் பன்னுங்க...

 


கூகுள் பிளே ஸ்டோரில், Huayna Money, RapidFinance உள்ளிட்ட போலியான கடன் செயலிகள் இருப்பதாக பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமான McAfee நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த கடன் செயலிகளை நமது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால், நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திருடி ஹேக்கர்களுக்கு அனுப்பி வைப்பதாக McAfee நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது கடன் வழங்கும் செயலிகளை ஒருவர் பதிவிறக்கம் செய்யும்போது, கடன் வாங்குவதற்காக ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை அதில் வழங்குகிறார்கள். இந்த தகவல்களை ஹேக்கர்கள் பயன்படுத்திக்கொண்டு வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடுகின்றனர்.இந்தியாவில் 15 போலி கடன் செயலிகளை 8 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி இருப்பதாக McAfee நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்தியாவில் அண்மைக்காலமாக ஆன்லைன் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிக கவனமாக தங்களுடைய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments