தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 


வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 2 நாட்களில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால் இன்று தமிழ்நாட்டிற்கு சில மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அதன்படி இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதேபோன்று நாளை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. 

மேலும் இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் அதனை ஒட்டிய மதியம் மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று பலத்த சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments