9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று போராட்டங்கள் நடைபெறும் நிலையில்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவுபகுதிக்கு முன்பு அமர்ந்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக நில அளவை அலுவலர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட நில அளவையர் ஒன்றிப்பின் மாவட்ட செயலாளர் சேதுபதி ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நில அளவை அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.
களப்பணியாளர்களாக செய்யும் அனைத்து வித பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்கவும் வேண்டும்.
உதவி இயக்குனர் கூடுதல் இயக்குனரின் பணிகளை கடமைகளையும் -மண்டல துணை இயக்குனர் இணை இயக்குனர் ஆகியோர்களுக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
தரமிறக்கப்பட்ட குறு வட்ட அளவர் பதவியை பெற்று தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் அமர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நில அளவையர்களின் போராட்டத்தால் ஆண்டிபட்டி தாலுகாவில் நில அளவை மற்றும் சர்வே பணிகள் பதிக்கப்படன.
மேலும் அரசு சிறப்பு திட்டங்களில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உட்பிரிவு பணிகளும் பாதிக்கப்பட்டன.
இதனால் நில அளவை பணிகளுக்கும், பல்வேறு அரசு திட்டங்களில் நில அளவைகள் மூலம் சான்று பெறுவதற்கும் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர்.
0 Comments