பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முக்கிய நபர் தற்கொலை


 தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சீசன் 8 ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி இருக்கிறார். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் அசோசியேட் இயக்குனர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதாவது அசோசியேட் இயக்குனர் ஸ்ரீதர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் நேற்று மாலை தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காவல்துறையினர் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments