பெஞ்சல் புயல்..... விழுப்புரத்தில் 8 பேர் பலி

 


வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த போதிலும் தற்போதும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பொழிவு இருக்கிறது.

சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கும் நிலையில்  இதுவரை புயலால் 8 பேர் பலியானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி சாத்தனூர் கிராமத்தில் இரு மூதாட்டிகளும், தொந்தி ரெட்டிபாளையம் பகுதியில் சிவகுமார் என்பவரும், டாஸ்மாக் ஊழியரான சக்திவேல் என்பவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் மொத்தமாக 8 பேர் விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments